நம் காதல்
உன்னோடும் என்னோடும் இருபது உணர்வுகள்தான்
அவை நிழல் தெரியாத இரு இதயத்தின் ஒரு வாசல் கதவு
அதில் வாசிக்க படுவது நம் முகங்கள் மட்டும் தான்
நமக்காக எத்தனை கனவுகள் வரிசை கட்டி நிக்கிறது
அவைகள் நாம் கண் சிமட்ட மறுத்தாலும்
நம்மை கட்டி வைத்தாவது காண்பிக்கிறது நிழல் தெரியாத ஒளிபடங்கள்
அங்கு பார்க்க படுவதும் நாம்தான் நடிக்கபடுவதும் நாம்தான்
கரடு முரடான பாதைகள் இருந்தாலும்
அதில் நம் பாதங்கள் படும் பொழுது
நீர் சொட்டும் தாமரையே நமக்காக பாதையில் மலர்கிறது
நம் பதங்களின் இறுதி பயண வரை
விற்க முடியாத நம் சந்தோசத்தை
மீண்டும் மீண்டும் வாங்க பார்க்கிறோம்
அதனால் கடனை வாங்கி செல்கிறோம்
கட்ட முடியாத அன்பினால்
எந்த ஒரு அர்த்தம்மில்ல நாம் பார்வைகள் தான்
இடம் பிடிக்க நினைக்கிறது
கவி வாசலின் சுவடுகளில்
எதை சொன்னாலும் சிரிக்கிறோம்
எதை செய்தாலும் ரசிக்கிறோம்
அங்கு நம் கைகள் அமைதியாக இனைதிருப்பதினால்
சொல்லாமலே உணர்த்து கொள்கிறோம்
எதை செய்யாமலே அறித்து கொள்கிறோம்
காரணம்
என்னோடு இருபது உன் இதயம்
உன்னோடு இருபது என் இதயம்
அங்கு வாசல்மட்டும் தான் வேறு
அதில் வாசிக்க படுவது
ஓன்று மட்டும் தான்
நம் காதல் ..., நம் காதல் ...,