குடிமகனே குடிக்காதே

மெத்தப் படித்தவர்
மொத்தமாய் விழுந்தார்
கல்வியும் கைலியும் சாக்கடையில்...
---------------------------------------
கல்லூரிக் கூட்டம்
இரவினில் ஆட்டம்
கல்வியும் போதையால் ஆடியதே...
---------------------------------------
உழைத்த காசும்
தண்ணியா(ய்)ல் கரைந்ததே
குடும்பமோ பசியால் உறைந்ததே...
---------------------------------------
தமிழ் நாட்டில் தண்ணீ(ர்)பஞ்சம்
குடிநீருக்கு மட்டுமே
வாழ்க அரசாங்கம் வாழியவே...
---------------------------------------
குடி குடியைக் கெடுக்கும்
என்ற‌
வாசகம் மட்டுமே வாழ்கிறது...
---------------------------------------
மகிழ்ச்சியென்றால் குடி
உடலில் நோயினைப் பிடி
பின் மடி...
---------------------------------------
துக்கமென்றால் குடி
சொந்தக்காரியை அடி
சீச்சீ வேண்டாமுன் நெடி...
---------------------------------------

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (7-May-15, 10:18 pm)
பார்வை : 512

மேலே