படம் பார்த்து கவிதை சொல்லுங்கள் - போட்டிக் கவிதை - உனக்குத் தெரியவில்லையா என் தேசமே
'படம் பார்த்து கவிதை சொல்லுங்கள் - போட்டிக் கவிதை - "உனக்குத் தெரியவில்லையா என் தேசமே?"
தேசமே என் தேசமே -எல்லோரும்
கைவசமே உன்னிடத்தில்தான் தேசமே -நீயோ
இப்போது இங்கே வெறும் சோகமே
எப்போது மாறப்போகிறாய் என் தேசமே?
===================================
====================================
வயது போகும் உனக்கு- நீ
காற்றோடு காற்றாய் களவு போவதா?
பல சாதனையில் நீ இருக்க
பல கடனில் நீ இருப்பதா?
====================================
====================================
குடும்பப் பிரச்சனையில் மக்கள் இருக்க
குழந்தை எதற்க்கடா பட்டினில் வாட?
அரசியலை நம்பியே என் தேசமாம்
அரசே மெய் இல்லா என் தேசமாம்!
=======================================
=================================
அரசியலில் பனம்பொரட்டும் என் தேசமாம்
ஆபாசபடம் எடுக்கும் என் தேசமே
கடல் கலக்கும் என் தேசமாம்
கலப்படம் கலக்கும் என் தேசமே
=================================
=======================================
குளிர் காயுதடா பச்சிளம் குழந்தை
கூடு இல்லா குருவிபோல் வீதியாய்
பள்ளி செல்ல பெண்குழந்தை மறுக்க
பள்ளி செல்லும் வழி காரணமாம்டா
========================================
-==================================
பாடத்தில் நேற்று படித்தேன் தெய்வத்தில்
ஆசிரியர் ஒன்று என்று- ஆனால்
இதழில் இன்று படித்தேன் பாலியல்
வழக்கில் ஆசிரியர் ஒருவர் என்று!
===================================
===========================================
இவையெல்லாம் " உனக்கு தெரியவில்லையா என் தேசமே?"
"தவறு என்று!
மேற்கொண்ட கவிதை எனது சொந்தப் படைப்பு என்பதை உறுதிப்படுத்துகிறேன்.
இப்படிக்கு
J.MUNOFAR HUSSAIN,
1ST YEAR CIVIL DEPARTMENT,
VEL TECH HIGH TECH ENGINEERING COLLEGE,
AVADI,
CHENNAI............