படம் பார்த்து கவிதை சொல்லுங்கள் - போட்டிக் கவிதை-கேளாத ராகம்

இசை- ஒன்று செவிகளில் நுழைகிறது
இது நிச்சயம் அவள் இசைதான் !

எங்கும் அவள் இசை !
வயல்வெளியிலும், நதிக்கரையிலும்
அது நிரம்பி திரிகிறது

அவள் இசையில்
வரிகள் இல்லை, வறுமை இருக்கிறது
தாளம் இல்லை , தனிமை இருக்கிறது !

அவளிடம் கண்களும் இருக்கிறது !!
அதில் கண்ணீரும் வழிகிறது
அவள் இசையிலும் அது கனக்கிறது

அவளிடம் மார்புகள் இருக்கிறது
அது காயங்களில் புதைந்திருக்கிறது - அனால்
அவள் வறுமையும் அங்குதான் துயில்கொள்கிறது !

அவள் வயிளினில் கசியும் இசையில்
ஒரு தேடல் இருக்கிறது
அது ஆடவரின் இச்சைக்கு தெரிவதில்லை

பெண்ணியம் பேச தெரிந்தவர்க்கும் -இவள்
பெண்மை புரிவதில்லை !

இசையினுடாய் அவள் பெண்மை
தெருக்களிலும் முற்றத்திலும் தனிமையில் துரத்துகிறது !

இன்று இருட்டில் ஏற்றிய தீபத்தில்
அவள் இசை மீட்கிறாள்- அருகில்
செவிகள் இல்லை என்பதை அறிந்தபின்பும்!

எழுதியவர் : நிரந்திரமானவன் (9-May-15, 12:54 pm)
பார்வை : 95

மேலே