நடிக்கிறாள்
வறுமையின் தாகத்தை
வட்டிக்கு வாங்கி
பருகித் தொலைக்கிறாள்
சாலையோரப் பெண்ணுக்கு கிடைப்பது
கரிசனப் பார்வைகளா
காமப் பார்வைகளா என
சோதனை செய்கிறாள்
நாட்கணக்கில் உடுத்தி
சலித்துப்போன உடையின்
நாற்றத்தை முன்னோட்டம் பார்க்கிறாள்
காலணியின் அருமை உணர
பாதங்களால்
பூமியை துடைக்கிறாள்
அவள் செய்த பிழை
ஏழையாய் நடித்துக்கொண்டு
நரம்பிசைக்கருவி பிடித்தது
ஒன்றுமில்லை
ஒரு மகாராணியின்
கற்பனைதான் அது.