கணையால் - வினையால்
உன் விழிகளுக்கு
தெரியும்
வில்லும் அம்பும்
தான்தான் என்று.
வலிபட்டது
இதயம்
என் கவிதை
உன் கையிலிருந்து
விடுபட்டபோது.
இதழ்
படித்ததை
இதயம் மறக்காது.
இதயம்
இருந்ததால்
விழிகளில்
கணை கோர்க்காதே.

