மன்னிப்பு
ஆயிரம் முறை கேட்டிருப்பேன் இந்த வார்த்தையை
உன் ஒவ்வொரு தவற்றிலும் உதிர்த்ததினால்
சிலநேரம் அழுதிருக்கிறேன்..
பலநேரம் அணைத்திருக்கிறேன்.
இந்த வார்த்தைகளினால் காயங்களும்
நான் கண்டதுண்டு - ஆனாலும் இன்றுவரை
வலிகள் கண்டதில்லை
இன்றைக்கு நீ சொன்ன
இந்த வார்த்தை மட்டும் எனக்குள்ளே ஏதோ செய்கிறது
மணக்கமுடியாததற்கு ஒரு காரணம்சொல்லி
மன்னிக்க சொன்ன உன்னை - நான்
மன்னித்துக்கொள்கிறேன் - அடிவயிற்றில்
உதையிட்ட அந்த சிசுவுக்கு என்னசொல்ல
மன்னிக்கவா? மரணிக்கவா?