பொறு பெறுவாய்

உணர்ச்சி
வசப்படுகிறாய்
உன்னை நீயே
வதைக்கிறாய்!

யோசித்துப்பார்! உன்
உணர்சிகள்
உனக்கு
உருப்படிகள் தந்ததா?

இல்லை..
இன்னும்
இருபடிகள்…தேவையே
இல்லாத
இம்சைகள்
இணைந்ததா?

உன்
உணர்ச்சியால்…
உன் மனிதம்
மரணமடைவதை
உணர்கிறாய்!

உறவுகள்!
உணர்வுகள்! பல
உண்மைகள்! சில
உள்ளங்கள்!
உடைக்கப் படுவதையும்,
புனிதங்கள்
புதைக்கப்படுவதையும்,
புரிகிறாய்!

உனது இந்த
பலஹீனத்தை, இன்னும்
பலப்படுத்த, சில
ஈனர்களால்
ஊதவைக்கப் படுவதையும்,
பார்க்கிறாய்!

இத்தனையையும், உன்
உணர்ச்சியின்
உஷ்ணம்
அணைந்த பின்
உணர்கிறாய்!

கவனம்!!
ஊதுபவன்
உதவுவதில்லை
உதவுபவன்
ஊதுவதில்லை!

எத்தனை
வருடங்கள்தான்
உணர்ச்சி
உன்னை ஆள்வது?

உணர்ச்சியை, உன்
அறிவு கொண்டு
ஆண்டுபார்!

வசப்படும்
வனப்பான
வழிகளெல்லாம்!
இதயம்
இழந்தவை
எல்லாம், இலகு
தவணையில்
இனாமாய்
இன்பமாய்
வந்திறங்கும்!

அதிக அறிவோடு
உணர்வு சேர்
உயர்ச்சி உன்னோடு
உறவு வைக்கும்!

அதிக உணர்வோடு
அறிவு சேர்
உன்னையே அது
உறைய வைக்கும்!

நீ
உணர்ச்சி
வசப்பட்டதை விட
ஏன்…
உணர்ச்சி
வசப்பட்டோம்
என்பதிலேயே – நீ
உணர்ச்சி வசப்பட்டது
அதிகமாக இருக்கும்!!!

ஆகவே,
பொறு
பெறுவாய்!!!

எழுதியவர் : அவ்பர் (10-May-15, 3:01 pm)
சேர்த்தது : ஔபர்
பார்வை : 48

மேலே