நானிருக்கும் வரை

சதை சேரும் முன்னே
உயிர் வந்த பின்னே
கருக்குள்ளே என்னை
தாலாட்டும் இசை

ஏந்தியே நீயிருக்க
ஏக்கத்தில் நானிருக்க
வலி எதோ ஒன்று தான்
உன்னுருவில் பிறந்த ஆண்

தொடையோடு உரசல்கள்
ததும்பினேன் நானே
அழுகையிலும் சிரித்தவள்
என் கதறல் ரசித்தவள்

மார்போடு பாலூட்ட
நாவினிற் பால் கரையும்
மொழி வந்த விதைகளே
இந்த மழலையின் ஓசை

தலை வாரும் சீப்புகள்
உன் விரல் நடுவின் வருடலே
கண்ணாமூச்சி ஆட்டத்தில்
உன் முந்தானை என் தேடலே

பதிந்திடும் முத்தத்தில்
பூத்திடும் பூ நான்
அணைத்திடும் கைகளும்
அன்புச் சிறைதான்

உன் கண்ணின் காந்தம்
எனக்கும் தொத்திக் கொண்டதோ
யார் வந்து மறைத்தாலும்
உன் திசை மட்டும் பார்கிறேன்

வீங்கிடும் கன்னங்கள்
அடிக்கடியின் கொசுக்கடி
கொசுவுக்கும் வீங்கிடும்
நீ அடிக்கும் ஓர் அடி

காய்ச்சலும் காய்ந்திடும்
உன் கை தொட்டால் போதும்
துன்பமும் துண்டாகி போகும்
என்னருகில் நீயிருந்தால்

நிழல் சொல்லும் திராணி
என்னோடு வா நீ
மகசூலாய் என் பாசம்
அறுவடைக்கு தயாரே

உன்னுள்ளே கரைந்திடவே
சூரியன் முன் பனிக்கட்டி
என் ஆயுள் எடுத்துக்கொள்
என்றென்றும் இருந்திடவே

கண் முன்னே காணாத
காற்றுப் போல் நானும்
வந்து வந்து போகிறேன்
உன்னை வாழ வைக்கிறேன்

பிரிவில்லை பிறப்புதான்
இந்த இதயம் துடிக்கும் வரை
உன் இறப்புக்கும் இறப்புதான்
நானிருக்கும் வரை

அன்னையர் தின வாழ்த்துகள்
என்னருமை அம்மா !!!

- குறிஞ்சிவேலன் தமிழகரன்

எழுதியவர் : குறிஞ்சிவேலன் தமிழகரன் (10-May-15, 9:32 pm)
Tanglish : naanirukkum varai
பார்வை : 2477

மேலே