நன்றி பாட வேண்டிய தினம் இன்று

அன்னையர் தினம் இன்று - என்
ஆசைத்தாயை போற்றிப்பாட வேண்டிய தினம் இன்று !
அழகிய தினம் இன்று - என்
அருமைத்தாயின் அன்பைப்பாட வேண்டிய தினமும் இன்று !
நன்றி கூற வேண்டிய தினமும் இன்று - நமக்காகவே
தன்னை தானே சுழற்றிக் கொள்ளும் பூமி மாதாவிற்கு - நன்றி
பாட வேண்டிய தினமும் இன்று - அனு
தினமும் நன்றி பாட வேண்டிய தினம் இன்று - நாம்
அனு தினமும் உயிர் வாழ்வதற்கு நீர் தரும் - கடல்
மனதை கொண்ட நீர் தாயிர்க்கு - அனு
தினமும் நன்றி பாட வேண்டிய தினமும் இன்று !
மனிப்பு கேட்க வேண்டிய தினம் இன்று - நாம்
செய்கின்ற அனைத்து தவறுகளையும் தாங்கிக்கொண்டு
நமக்காகவே வாழும் கடவுள் - தந்த
இத்தனை அன்பு தாய்களுக்கும் மனிப்பு கேட்டு - நன்றி
பாட வேண்டிய தினமும் இன்று ............!

எழுதியவர் : ர.கீர்த்தனா (10-May-15, 10:57 pm)
பார்வை : 3402

மேலே