தமிழ் பெண்
பெண்ணே பெண்ணே
தமிழ் பெண்ணே
உன் உயிரால் எழுந்தது
என் மெய் காதல்
உயிரும் மெய்யும் இணைந்து
216 காதல் நரம்புகள் படற
காண்கிறேன்
இலக்கணம் எதுக்கு பெண்ணே
ஒரு கவிதைக்கான மொத்த
சுவையும் உன் அசைவுகள்
கூறாதா
செய்யுள் எழுத வந்தவன்
செயல் இழந்து போகிறேன்
இறைவாழ்த்து எழுத வேண்டியவன்
காதல் வாழ்த்து எழுதுகிறேன்
சிலப்பதிகார பெண்ணே
என் காதலுக்கு செயல் வடிவம் கொடேன்
கம்பன் கண்ட உன் கண்ணை
எனக்கும் கொஞ்சம் காட்டடி
பாரதி கண்ட பெண்ணே
உனக்கு தாசனாய் என்னையும்
மாற்றிவிட்டாய்