உன்னால் அறிந்தேன்
அன்பே
உன்னை கைகளில் ஏந்தும் போதுதான்
நிலவின் எடை அறிந்தேன்!
உன் விரல் நுனி தீண்டும் போதுதான்
இதய குடை விரிவதை உணர்ந்தேன்!
உன் கருவிழி அசைவை பார்க்கும்போதெல்லாம்
என் கண் இமை அசைவற்று இருப்பதை
அறிந்தேன்!
உன்னோடு கலந்த பின்புதான்
உணர்விற்கும் 'உடை' உண்டு என அறிந்தேன்!
இன்று
உணர்வின் 'உடை' கலைந்தேன் உன்னால்.................