பெப்சி கோலா

பெப்சி கோலா
எங்க ஊரு
பதநீ இளநீக்கு மேலா??!

குளிர்பானம் பேரு
கழிவறையில் பினாயிலுக்கே
சவால் விடுது பாரு!

துரு போகுது
கரை போகுது
குடித்தால் சிலநேரம்
உயிரும் போகுது!

தவளை மிதக்கும்
பல்லி மிதக்கும்
கேள்வி கேட்டு
வழக்கு தொடுத்தா
காசுல மிதக்குது கேசும்
காத்துல கரையுது!

பருகி பார்த்தா அப்பப்பா
உடலின் கால்சியம்
வீனாபோகுது யப்பா!

குடிச்சா குடலுக்குதா
கேடுன்னா
தயாரிபின் கழிவால்
ஊ(நீ)ருக்கும் கேடு!

இரசாயன
கழிவுகள் கலந்து
நிலத்தடி நீரும்
நிறம் மாறிப் போச்சு!

எம்-குடிக்கு
குடிநீரையும்
அளந்து வழங்கும்
அரசே!

இரசாயன பானம்
தயாரிக்க மக்களின்
இரத்தம் உறிஞ்சுனுமா?!

பொங்கி திங்க
ஒத்த ரூபா!
மீதி கழிக்க
ரெண்டு ரூபா!
ஆனா தவிச்ச
வாய்கு தண்ணி மட்டும்
பத்து ரூபா??!

இப்படியே போன
கொப்பளிக்க பன்னீரிருக்கும்
குடிக்க தண்ணீரிருக்காது
பாத்துகோங்க!

எழுதியவர் : red (12-May-15, 12:16 am)
சேர்த்தது : சூரியா உதயன்
பார்வை : 73

மேலே