நேபாளம் பூகோளம்
நேபாளம் பூகோளம் !
பார்த்து பார்த்து கட்டிய
வீடு !
மொத்தத்தில் மண்ணு
மேடு!
பாடை கூட கட்டவில்லை
படுத்த இடமே சுடுகாடு !
கூத நடுக்கம்
தங்காதே தேகம் !
விழ்ந்த கூரை
தாங்குமா?
செங்கல் குவியல்
ஒருபக்கம் !
பிணக்குவியல்
மறுபக்கம் !
இமயத்திற்கு
கைகள் இருந்தால்
இறுக்கி பிடித்திருக்குமோ?
அதன் காலும்
ஆடி போச்சே !