வைகை

வைகை

இறைவன் கை வைத்ததால்
வந்த நீரு !
அவன் கை விரித்ததால்
காணாமல் போன நீரு !

அழகர் வரும் முன்னே
அளவா வரும் நீரு !
அழகா பார்த்து ரசிச்சு
களவா போன நீரு !

கம்பம் மெட்டு
நீ தொட்டு !தொட்டு !
கால் கொலுசு
இல்லமால்
சல சலன்னு வந்த நீரு !

சுருளி ஆறு ! மஞ்சள் ஆறு !
முல்லையாறு !
எல்லாம் சேர்த்த பேரு !
சுணங்காம பாஞ்ச
வைகை ஆறு!

வெள்ளை மண்ணு
அள்ளி அள்ளி
வெற்றிடமா காஞ்ச பாரு !

பார்க்கின்ற இடம் எல்லாம்
வெறும் காணல் நீரு !
படிக்க மட்டும் இருக்குமோ
உன் வரலாறு !

மேகத்துக்கு உன் சோகம்
இன்னும் தெரியவில்லயா ?
மேற்கு தொடர்ச்சி மலை
பெற்ற பாவ பிள்ளையா?
மாறி மாறி மண் அள்ளும்
மனிதர்களுக்கு இரக்கம் இல்லையா ?
இன்னொரு முறை கை வைக்க
இறைவன் இல்லையா ?

எழுதியவர் : செந்தூர் பாண்டியன் (12-May-15, 2:07 am)
சேர்த்தது : ksenthur17
Tanglish : vaikai
பார்வை : 1190

மேலே