இலையுதிர் காலம்

காற்றுக்கு கொடுக்க வேண்டும்
கடுஞ்சிறை தண்டனை..
காதலித்த பூவினை
தன்னை விட்டு பிரித்ததால்! இலையுதிர் போராட்டம் செய்யும் புங்கை!!
புயல் என்ற கலவரத்தை தூண்டிய காற்றை
கைது செய்ய சூரியனிடத்தில் மன்றாடி
இலைகளை வழக்கு செலவு செய்து
வசந்த காலத்தை தீர்ப்பாக பெற்று
"புதிய காதலியாய்" புதிய மலர்களை
பெற்றிடும் போராட்டமே "" இலையுதிர் காலம்""
இங்கு "" காதலும் "" நிலையில்லை
"" காலமும்"" நிலையில்லை
## அம்முவாகிய நான் #