சன்மானம் பெற்றதாய் சபையிலே

எழுதிடவே விருப்ப மெனக்கு ஏராளம்
அன்னைத் தமிழால் அழகுறவே - காணும்
காட்சிகளைக் கொண்டு கவிதை நானும்
படைத்திட பதிவிடவே இங்கும் !

நினைப்ப தெல்லாம் நினைவில் தேக்கி
தினமும் ஒன்றென திகட்டாது - வடித்ததை
வாசிக்கும் நெஞ்சங்கள் வாழ்த்திட எனையும்
நேசிக்கவே சுவாசிக்கவே தமிழை !

வெண்பா வடித்து வேந்தாராகும் எண்ணமிலே
நன்பாவாய் வந்தாலே நண்பர்களும் - படித்தாலே
கண்மாயில் குளித்து சுகம்பெற்ற களிப்பிலே
சன்மானம் பெற்றதாய் சபையிலே !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (13-May-15, 8:28 am)
பார்வை : 107

மேலே