இது ஏன்

விழித்திடு உயிரே ...!

இரவில் தோன்றி
இலையின் நுனியில் வாழும்
பனித்துளிகள் கூட
பகலவனின் பளிச்சென்ற ஒளியில்
காலை நட்சத்திரமாய் ஜொலிக்கிறது..

பகலில் மறையும்
அழகிய மின்மினிகள் கூட
சந்திரனின் சந்நிதியில்
மின்சார விளக்காய் மிளிர்கிறது..

உயிரே ...
ஏனோ .....
நீ மட்டும் விழித்தும் உறங்குகிறாய்
கலைமகள்
விலைமகள் ஆனதுகண்டும்
காணாமல் திரிகிறாய்..
கலைக்குயில்
கூவாதது கேட்டும்
விடியல்
தர மறுக்கிறாய்...-இது ஏன்...?

மரமின்றி மழை நிற்குது
மண்ணின்றி மனை நிற்குது
போர் தொடுத்து உயிர் போனது
பணமே வாழ்வென்று உறவு பிரியுது - இது ஏன்...?

உலகில் பிரச்சனை அன்று
பிரச்சனையில் உலகு இன்று

இதயம் வலிக்கிறது
கண்ணீர் வழிகிறது
மனிதநேயம் எழுகிறது மனதில்
வேகம் மட்டும் எழவில்லை செயலில்

உணர்வுகள் ஊமையானதும்
தளர்வுகள் துளிர்விட்டதும் ஏன்???


ஏன் எனும் கேள்வியில் உன் விடியல்
விடைகாணும் நொடியில் உலகின் விடியல்

விழித்திடு உயிரே
விடியல் மிக அருகிலே...

எழுதியவர் : ஏஞ்சல் (13-May-15, 9:10 am)
சேர்த்தது : ஏஞ்சல்
Tanglish : ithu aen
பார்வை : 65

மேலே