சில்லறையை சிதற விட்டது போல
நாட்டு
விலைவாசியை எண்ணி
பிச்சைகாரனின் பாத்திரம்
சிரித்தது
சில்லறையை
சிதற விட்டது போல.....!
பணக்காரனின்
காணிக்கையை எண்ணி
குடிசை ஆலயம்
சிரித்தது
சில்லறையை
சிதற விட்டது போல.....!
கண்டக்டரின்
பதிலை எண்ணி
டிக்கேட் பணப்பை
சிரித்தது
சில்லறையை
சிதற விட்டது போல.....!
உறுப்பினா்களின்
புள்ளிகளை எண்ணி
புதுகவிதைகள்
சிரித்தது
சில்லறையை
சிதற விட்டது போல.....!