துணை
சூரியனின் அனல் கூட எனக்கு
குளிர்ச்சி தந்தது உன்னால்
நான் வைத்த செடி பூ
பூத்தது உன்னால் - உனக்காகவே
மாலை வந்ததும்
நிலவு வந்தது - உன் முகம்
இரவில் தூங்க உன் மடி
இவை அனைத்திற்கும்
துணையாய் இருந்த நீ
அன்னபறவை போல்
என் இதயத்தை எடுத்துக்கொண்டு
உன் நினைவை மட்டும்
எனக்கு துணைக்கு விட்டு சென்றாய்...........
இனி
உன் நினைவை மட்டும்
துணை கொண்டு காத்திருக்கிறேன்.............
நம் மறுப் பிறப்பிற்காக............
என்றும் பிரியமுடன்
பிரியா ஜோஸ்