யார் நீ

இதயத்தில் வலி ..
எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது
இதயத்தில் வலி ...
பெண்ணே ..
உன்னை எதிரே பாராத போதும்
வலி தான் ...
என்ன மந்திரம் செய்கிறாய் ?
இப்படி சுழன்று ஆடுகிறதே மனது ..
வேண்டும் என்று செய்கிறாயா ? இல்லை
வேண்டாம் என்று செய்கிறாயா ? புன்னைகையை ...
நீ நல்லவளா ? கெட்டவளா ?
பட்டி மன்றத்திலே பந்தாடுகிறதே மனது ..
இதயத்தில் வலி ...
நீ பாசக்காரியா ? இல்லை வேஷக்காரியா ?
கண்டு கொள்ள துடிக்கிறது மனது , உன்னை
கண்ட நாள் முதல் ...
பெண்ணே ...
ஒரு வார்த்தை சொல் ...
நான் சாகக்கிடக்கிறேன் ....