நான் சொல்லாத கதைகள் - உதயா

எனக்கான ஓர் அடையாளம்
விருதாய் கிடைத்த மேடையில்
என்னுள் பிறந்த ஆனந்த தீபத்தில்
அன்று சிறுவயதில் நான் படிக்க உதவிய
என் கிராமத்தின் தெருவிலக்குகளும்
நிறைந்துக் கொண்டது

விருதின் உடலாய்
என் தந்தையின் வேர்வையும்
என் தாயின் கண்ணீரும்
என் அண்ணனின் தியாகமும்
என் அக்காவின் பிராத்தனையுமாய்
நிறைந்து இருந்தது

அன்று பல வைகறையை
என் படிப்பிற்காக நான் இரவிடம்
கடன் வாங்கியிருந்தேன்
பல நாட்களை பசி
என் வயிற்றினை
குத்தகை எடுத்துயிருந்தது

நடந்து முடிந்த காலமெல்லாம்
கனவாய் கண்முன்னே
ஓடிக்கொண்டிருந்தது
அரங்கத்தின் செவிப்பறையை கிழித்த
கைதட்டல் ஓசை என்னை
நினைவிற்கு அழைத்து வந்தது

மேடையில் என்சொர்க்கள் அனைத்தும்
ஊமையாகிப் போனது
என் கண்ணீர் துளிகள் மட்டும்
சில கதைகளை சொல்லிக்கொண்டிருந்தது
உணர்ச்சியில் சிறுபிள்ளைக்கு
இணையாகி போனேன்

வாழ்வில்
எத்தனை இழப்புகள்
எத்தனை மோதல்கள்
எத்தனை கஷ்டங்கள்
எத்தனை தூற்றல்கல்
அத்துனையையும் பிசைந்து
சிம்மாசனமாக்கி அதன்மேல்
அவ்விருது அமர்ந்திருந்தது ....

இன்னும் சொல்லப்படாத
பல கதைகள் கண்ணீரிலும்
விருதிற்கு பின்னாடியும்
சிதறிக்கிடக்கிறது ......

எழுதியவர் : udayakumar (17-May-15, 2:15 pm)
பார்வை : 588

மேலே