புரிந்ததா என் செந்தமிழ்த் தோழா

தேனூறும் இதழ்கள்
முகம் திங்கள்
விழி பேசும் காதல்
இதழ்களில் மௌனம்
புன்னகை பூக்கும் இதழ்கள்
செந்தமிழ்க் கவிதை
உணர்வலைகள் தவழும்
இதயம் தாமரைப் பொழில்
மலர்க் கணைகள் எய்திடும்
பூமயிர் புருவம் காமன்வில்
புரிந்ததா என் செந்தமிழ்த் தோழா
இது மலர் மன்னன் ஆண்டு !
......கவின் சாரலன்