ஒரு நொடியில் ஒரு கொடியில்
ஒரு நொடியில் ஒரு கொடியில்
சிலிர்த்துப் பூத்தது ஜில்லென்ற காற்றில்
ஒரு சின்ன மலர்
இளந் தென்றல் காற்றில்
இதழ் விரித்து கொடியோடு
தலை அசைத்து ஆட
முகில் துளி முத்துக்கள்
வந்து முத்தமிட்டது
மலரிதழில் !
___கவின் சாரலன்