ஜெயசாயி சாயிநா தா - சித்திர கவி
இது ஒரு சட்கோண பந்தம். சட்கோண பந்தம் என்பது சித்திர கவி வகைகளுள் ஒன்று.
நேரிசை வெண்பா
பொன்மன்னன் என்றுன்றன் பாதம் பிடித்தோமே
இன்ன லகற்றித் துணையாக - நின்றே
வியனுலகு காப்பாய் அரியா சனத்தின்
ஜெயசாயி சாயிநா தா !
வித்தக இளங்கவி
விவேக்பாரதி