எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்

ஊர் ஊராய் போகிறோம்
உழைத்தேத்தான் உண்கிறோம்
ஆங்காங்கே அமர்கிறோம்
எங்கெங்கோ துயில் கொள்கிறோம் ........
ஊசிமணிப்பாசிமணி - சோப்பு
சீப்புக்கண்ணாடித் தான் - அத
விற்பது எங்க பொழப்பே தான்
எங்களிலும் பலர் செய்கிறார்களே
வெவ்வேறு வேலைத்தான் ..........
எங்கள் பொருட்களை விற்பதற்காக
வெவ்வேறு இடம் செல்கிறோம் - வெவ்வேறு
ரயில் பெட்டிகளில் ஏறுகிறோம்
இறுதியாக ஓரிடம் வந்து ஒன்றாய் கூடுகிறோம் ...........
நாடோடி மக்களாகிய நாங்கள் - நாடோடி
பயணம் போகயிலே - நகரில்
வாழும் நாகரிக மக்களைப் பார்கிறோமே ...........
நாகரிக மக்களைப் பார்க்கயிலே - நான்
பெத்தெடுத்த ஒத்த ராசாவும் - இவர்களில்
ஒருவனாய் வர மாட்டானோ என்று என்னுகிரேனே ............
எங்களிலும் பலர் உயர் பதவியில் உள்ளார்களே - நான்
பெற்று எடுத்த மகனும் ஒரு நாள் உயர்ந்து நிற்பானே .............
அந்த நாள் நாடோடி பயணம் விடுத்து - நாங்களும்
நகர வாழ்க்கைக்கு வருவோமே - அப்பொழுது
இந்த நாகரிக மக்களுடன் நாங்களும் கலப்போமே ................