காணவில்லை உண்மையை
நீதிமன்றத்தில்
வழக்கொன்று
வாதத்திற்க்கு வந்தது
உண்மையை காணவில்லையென்று
பொய்கள்
ஒன்றுக் கூடி
வாதிட்டன
உண்மை நாங்களென்று
காணாமல் போன
உண்மையை கண்டுபிடிக்க
உத்தரவிட்டார் நீதிபதி
பொய்கள் கூடி பேசி
தங்களுக்குள்
உயர்ந்த பொய்யை
உண்மை வேடமிட்டு
கூட்டி வந்தனர்....
பொய்களின்
வாதபலத்தால்
உண்மை கிடைத்ததாய்
தீர்ப்பு வாசித்தார் நீதிபதி
பொய்கள் கூடி
நீதிபதிக்கு வாழ்த்துரைக்கையில்
தன்
கண் கட்டை அவிழ்த்து
தராசினை தூர எறிந்துவிட்டு
நீதிமன்றம்
விட்டு வெளியேறினால்
நீதி தேவதை.....
பாண்டிய இளவல்(மது. க)