மருத்துவமனைகளா மயான கூடங்களா எங்கள் இலவச அரசுமருத்துவமனைகள்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

மருத்துவமனைகளெல்லாம்
மயானமாகின்றன
மதிக்கெட்டவர்கள் இங்கே
மருத்துவரானதால்

பணமிருந்தால் மருத்துவம்
இல்லையென்றால் மறுத்திடுவோம்
இவர்களின் நீதிமன்றத்தில்
எழுதிவைக்கப் படா சட்டம்

கர்பவதிகளுக்கு இடுப்புவலி வந்தாலும்
ஊசி வரவில்லையென்றாலும் ஊசி
அறுவைச் சிகிச்சை நடத்திட
இவர்களின் குடும்பம் அறுசுவை உணவு தின்றிட

தாயின் வயிற்றைய் கிழித்து
குழந்தையெடுக்கும் இவர்களே
பணம் பணமென்று கேட்டு அவர்களின்
வயிற்றெரிச்சலையும் எடுப்பதும் ஏனோ

இவையாவும் தெரிந்தோ அழுதுக்கொண்டே
பிறக்கிறது சிசு
நான் பிறந்ததற்கு
மொய் வைக்க வேண்டுமெ யென்று

தாய் நலம் சேய் மரணம்
சேய் நலம் தாய் மரணம்
இங்கே வாடிக்கையாகி போனது
ஏழைகள் இங்கே வாடிக்கையளார் ஆனதால்

எல்லாம் கடவுள் காட்டும் வழியென்று
இல்லாத ஒருவனை கைகாட்டி விடுகின்றன
கத்தி பிடித்த இந்த கடவுள்கள்

இரத்தத்திற்கு இரத்தம் சத்தமில்லாமல்
பெற்றுக்கொள்ளும் இலவச இரத்தவங்கி
பாதுகாவலன் முதல் பாதுகாப்பவன் வரை
இலவசமென்ற பெயரில் இலட்சியமாகி விடுகின்றன
பணமென்ற காந்தி தாள்கள்

சுத்தம் இல்லை சுகாதாரம் இல்லை
ஆதராம் இருந்தும் கைக்கட்டி
வேடிக்கை காணும் எம(ன)து அரசாங்கம்

செய்கூலி சேதாரம் கிடையாது
ஏமாற்றப்படுவது நகைக்கடைகளில் மட்டுமல்ல
எங்கள் இலவச அரசுமருத்துவமனைகளிலும் தான்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (19-May-15, 9:26 pm)
பார்வை : 619

மேலே