நில்-கொல்-வெல் – கே-எஸ்-கலை

கையைக் கட்டி
வாயைப் பொத்தி
கழுத்தை நெரித்தும்...
வல்லுறவுக்காய்
குறி நிமிர்த்தும்
வல்லூறுகள்....

செத்து மடியும்
தேகத்தை தேய்த்து
மோகத்தைப் பீய்ச்சி
முகர்ந்து மொய்க்கும்
விந்துக் கழிவுகள்....!

தங்கையைப் புணர்ந்து
வீடு கடக்கும்
புலாலுண்ணிகள்....

கனவுகளைச் சுமந்து
தெரு கடக்கும் தேவதைகளை
தினவுக்கு இரையாக்கும்
காட்டேரிகள்....

கழிவறை போன்றொரு
கருவறையில்....
கழிவொன்று. கசியவிட்ட
காமக் கழிவுகள்...!

யோனி வழி வெளிவந்த
மனித மிருகங்கள்....!

பெண்ணினமே....
கண்ணியமான
ஆணினமே....

சட்டம்
ஓர் இருட்டறை....
நீ வா
வெளிச்சத்திற்கு....!

தெருவுக்கு வா....
சாட்டை எடு
சுழற்று...
அடி....
ரத்தம் பார்...குற்றம் களை !

நிர்வாணமாக்கு...
தோலுரி....
கொல்....
குழி தோண்டு....
புதை.......சரித்திரம் விதை !

சட்டம்
உன்னை மதிக்கவில்லை.....

சட்டம்
உன்னை காப்பாற்றவில்லை....

சட்டம்
உன்னை பாதுக்காக்கவில்லை....

நீ மட்டும் ஏன் சட்டத்தை ?

எழுதியவர் : கே.எஸ்.கலை (19-May-15, 10:40 pm)
பார்வை : 156

மேலே