நிகழ்வுகளின் தாக்கம்
நூற்றுக் கணக்கில்..வெடிவிபத்திலும்
ஆயிரக்கணக்கில்..வெள்ளப்பெருக்கிலும்
பல்லாயிர பேர் பூகம்பத்திலும் ..
லட்சக்கணக்கில் ..இனப்படுகொலையினாலும்
கோடிக்கணக்கில் வறுமையினாலும்..
எங்கோ தூரத்தில் ..
மக்கள் இறக்கின்ற செய்திகள்..
விளம்பர நேரத்தில் சேனல் மாற்றி
பார்க்கின்ற "செய்திகள்" தான்..
எதுவும்..
இருக்கும் இடத்தில் நிகழாத வரை!
கலைநிகழ்ச்சிகள், ஐ பி எல் போட்டிகள்..
ஆன்லைனில் பங்கு சந்தை நிலவரங்கள்
மின் தடையின்றி பார்க்க வேண்டுமே..அது வரை!