மானங்கெட்டவர்க்கே மரியாதை அதிகம்

பிஞ்சுகளை சிதைக்கிறது
நஞ்சினை விதைக்கிறது
சிந்தனை இருப்பவனை
கூண்டோடு ஒழிக்கிறது.....
மானம் மரியாதை பற்றி
கோவலனாய்ப் பேசி
மதியம் ஒன்றாய் இரவில் ஒன்றாய்
காமுகனாய் களிக்கிறது.......
வண்ணத்துண்டு அணிந்து
வண்டியேறி வந்து
வெக்கமின்றி
வாக்குக் கேக்கின்றது....
எச்சில் காசுக்கு நாலு ஓட்டு
ஈன அறிவுக்கு நாலு ஓட்டு
பத்தவில்லை என்றால்
இருக்கவே இருக்கு கள்ள ஒட்டு...
.
ஒட்டு வாங்கி
நம்மையாக்குது
ஒட்டுமொத்தமாய்
ஓட்டையாண்டி…..
ஊனம் உற்றவர்
உதவித்தொகையிலும்
ஊழல் வளர்த்திடும்
ஊதாரிப் பேய்கள்......
பேய்கள் அண்டி
பெருத்திடும் உண்டி
மானம் கெட்டாலும்
ஈன வாழ்வு வாழ்கிறது.....
பட்டினி பற்றி
பத்தி பத்தியாய் பேசி
பசித்தவர் உணவை பதுக்கி
ருசித்தே நன்கு பெருக்கிறது.....
தன்னலம் நினையா
கர்ம வீரரையும் தோற்கடித்த
கல் நெஞ்சக்காரர்களின்
கறுப்புக் கலியுகத்தில்
மானம் கெட்டவர்க்கே
மரியாதை அதிகம்
மனச்சாட்சி கொன்றவர்க்கே
பொருட்ச்செல்வம் குவியும்………..