உன்னை வாழ்த்திப்
உன்னை வாழ்த்திப்
பாடுகிறேன்.....
என் உயர்விற்காய்
உள்ளம் தந்தவள்
நீ என்பதால்.....
தென்றல் காற்றும்
தேகம்
தீண்டும் தேவி
நீ.....அருகே
இருந்தால்.....இல்லையெனில்
எனைத் தாண்டிப்
போகும்.....
சொல்லமுடியாத
சோகங்கள்.....
சொல்லத்
துடிக்குது
உதடுகள்....ஆனாலும்
எனக்குள்ளேயே
அது
இருக்கட்டும்.....
நினைவுகளை
சுமந்து
வாழ்வது
நிம்மதியே
நிஜமாய்......
இன்றுவரை
ஓட்டிக்காத
உறவுகளுக்கு
நன்றி.....என்
வெற்றிக்கு
அடியிட்ட
ஆசான்கள்
நீங்களே.....
பிரதேசம்
மாறி
பரதேசியாய்
போனாலும்
நாய் வாலை
நிமிர்த்தலாமோ....?
இது போல
நீங்கள்
நீங்களாகவே
இருங்கள்.....நாய்க்கு
நடுக்கடலிலும்
நக்குத்
தண்ணிதான்......
தவறுக்கு
மன்னிப்பு
கேட்காத
நீங்கள்......தரணியில்
வாழ்ந்து
மறுபடி
தவறிளைக்கலாமோ....?

