என்னென்பேன் உன்னை

தான் என்பதுதான் மனமா..
தன் வசம்தான் மனமா..
பொல்லாததா ..நில்லாததா
வஞ்சத்தீயதுவா..வன்மம் நிறைந்ததுவா
பேதையதுவா.. போதையதுவா..
எல்லாமறிந்ததா.. ஏதுமறியாததா..
சேட்டைகள் செய்வதா..நிட்டையில் வளர்வதா..
முடிவிலா பொருளா ..மூலக்கனலதுவா..
நின்னைப் புரிகிலேன் மனமே !
என்னென்பேன் உன்னை ..என் மனமே!

எழுதியவர் : கருணா (21-May-15, 3:51 pm)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 165

மேலே