கல்வி முறை

மெக்காலேயின் கல்வி முறை
என்னை எல்லாவற்றையும்
மனப்பாடம் செய்ய வைத்து
என் வரலாற்றை ..
என் கலாச்சாரத்தை
மறக்கச் செய்தது..!
அதற்கு பதிலாக..
ஆங்கிலத்தை ஏற்கவும்,
அதனைக் கற்கவும்..
அதன் கூடவே..
வளைந்தே நிற்கவும்..
குனிந்தே வணங்கிடவும் ..
கூழைக் கும்பிடு போடவும்..
அடிமைதான் நான் என்றே
அல்லும் பகலும் நினைக்கவும்..
அஞ்சியஞ்சி வாழவும்..
சுயமரியாதை மறக்கவும்..
இன்னொருவன் காலை இடறவும்..
லஞ்சலாவண்யம் பற்றியும்
குழிகள் பறிக்கவும்
கற்று தந்தது..
இவற்றிலெல்லாம் ஈடுபாடில்லாது
இவற்றில் எல்லாம் பூஜ்ஜியமே
மதிப்பெண் பெற்றதாலே
எவ்வளவு பேர்களை
மறுதேர்வு வைத்து
செப்டம்பரில் பாஸ் ஆக்கியது
அதன் அணுகுமுறை!
அப்படியும் நான் தேறவில்லை..
அதுவே என் குறை!

எழுதியவர் : கருணா (21-May-15, 2:13 pm)
பார்வை : 819

மேலே