மாயம்

உயிர் கண்டேன்
உடல் கண்டேன்
ஜடம் கண்டேன்
முடம் கண்டேன்

நதி கண்டேன்
மதி கண்டேன்
மலை கண்டேன்
இலை கண்டேன்

துளிர் கண்டேன்
துளி பனிக் கண்டேன்
மான் கண்டேன்
வான் கண்டேன்

காதல் சமைத்து
மோகம் சுவைத்து
இல்லும் கண்டேன்
பலர் சொல்லும் கண்டேன்

யாதும் கண்டேன்
கண்ணா
வெறும் மாயம் என்பேன்
கண்ணா
முகங்கள் அற்ற முகிலாய்
பல மாயம் கண்டேன் கண்ணா

ஆழம் உள்ள கடலும்
ஆழ்பொருள் இல்லை கண்ணா
நிலையே இல்லா உலகில் என்
நிலை தான் என்ன கண்ணா

எழுதியவர் : கவியரசன் (22-May-15, 9:25 am)
Tanglish : maayam
பார்வை : 73

சிறந்த கவிதைகள்

மேலே