சுதந்திர தாகம்
நீர்குமிழி போல்
வேகமெடுத்து ஓடிவரும்
மனம்
கூண்டில் படபடவென
சிறகடித்து ஓய்கிறது.......!
கனவுகளாய் வாழ்க்கை
அமைத்திடுவாயோ.......?
ஒரு வெள்ளைத்தாளிலில்
அடைப்படும் குறுங்கவியோ என்
வாழ்க்கை
அனுதினம் ரசித்தெழுதி
வீசுகையில்
கடலும் தேடட்டுமே புதுப்
பரப்பிடத்தை
ஆறடி கூண்டு கட்டி
அது இதுவென ஆட்டம் காட்டி
ஆடுறா ராமா என்பதுவோ வாழ்வு
ஆறறிவினத்து விலங்கோ நான்
அதற்கு
அரைகுறை என அழைத்துக்கொள்
குறைவறி யான் வாழ்கிறேன்
சுதந்திர மனிதனாய்