நீ வெறுத்த மாலைநேர கதிரவன் 555
உயிரே...
உனக்கு தெரியுமா...
எத்தனை அந்திசாயும் நேரம்
உன்னை தொடர்ந்து வந்து இருப்பேன்...
எத்தனை சாயங்காலங்கள் உன்னோடு
மாலைநேர கதிரவனை ரசித்திருப்பேன்...
நீ என்னை
வெறுத்ததும்...
அந்த மாலைநேர கதிரவன்
நம்மை ரசித்தபோதுதான்...
தினம் வரும் ஒவ்வொரு
சாயங்காலங்களும்...
என்னை மரணபடுத்தி
கொண்டுதான் இருக்கிறது...
நீ கொடுத்த வலி கொஞ்சம்
அதிகம்தான்...
இருந்தும் தடைவிதிக்கவில்லை
என் காதல்...
உன்னை மட்டும்
சுவாசிபதற்க்கு.....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
