எனக்குப் பிடிக்கவில்லை

நீதான் ..தூரிகை தந்தாய் ..
நான் ஓவியம் வரைய..

நீதான் ..இறகு தந்தாய்..
நான் கவிதை எழுத..

நீதான்..மலர்கள் தந்தாய்..
நான்..மாலை சூட்ட.

இன்று..
நீதான்..மறந்து போனாய்
நான் ..........................

*******

ஏய்..
இன்னாங்கடா.. இங்க வேடிக்கை
கல்லால் அடிப்பேன்..
ஓடுங்கடா....

*****

நீதான்..
நீதான்..
நீ..
நீயேதான்..
நான்..
நானேதான்..

..
என்று குழறியபடி
சாலையின் ஓரத்தில் ..
தன் கிழிந்த சட்டையின்
ஓட்டைகளை
எண்ணிக் கொண்டிருந்த அவனை
எட்ட இருந்து ரசித்தபடி
நகர்கின்ற கும்பலை
கண்டாலே.. ஏனோ..
எனக்குப் பிடிக்கவில்லை!

எழுதியவர் : கருணா (23-May-15, 3:49 pm)
பார்வை : 635

மேலே