காதலே இதயம் வா
மழையே மண் பொழி
மழையே மண் பொழி
மண்ணின் தாகம் தீருமட்டும் மழையே மண் பொழி
அதிகம் பொழிந்து அனையுடைக்க பார்க்காதே..
காற்றே நீ வீசு
காற்றே நீ வீசு
ஐந்தறிவும் ஆறரிவும் சுவாசம் போதுமட்டும் காற்றே நீ வீசு
கட்டவிழ்ந்து வீசி காடளிந்து போகாதே..
அலையே கரை தொடு
அலையே கரை தொடு
கால்தடம் திருடி களவுதொழில் செய்துக்கொள்
கரைதாண்டி நீயும் காலன் தொழில் செய்யாதே..
காதலே இதயம் வா
காதலே இதயம் வா
இறக்கும் தருவாயிலும் நேசிக்கும் இதயம் மட்டும்
காதலே நீ வா
இடையில் ஏமாற்றும் இதயம் நீ நுழைந்து
என்போல் கண்ணீர் இன்னொருவன் சிந்த பார்க்காதே..

