கருவாட்டுச் சிரிப்பொலி

மணக்கும் மலர்த் தோட்டத்து
மண்ணின் மைந்தர்களே
வாசமலர்களே !
வயிறு பசித்தால்
பூவையும் இலையையும்
மண்ணையுமா தின்பான்
வாடை அடித்தால் என்ன
வயிற்றுக்கு உணவு
கருவாடுகள் தானே !
ஹா ஹா ஹா
கூடையுடன் குலுங்கிச் சிரித்தன
கருவாடுகள் !

---கவின் சாரலன்
இழிவு வருங்கால் நகுக ------வள்ளுவர்

எழுதியவர் : கவின் சாரலன் (24-May-15, 10:19 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 53

மேலே