வல்லுநர் கருத்து

"என்னைப் பிடித்திருக்கிறதா"
என்று நீ போட்ட ..
அளவு குறைவாக..
வந்து விழுந்த பந்து
வேகமாய் எழும்பி ..
என்னை குழப்பி
எக்குத்தப்பாக
கேட்ச் கொடுக்க வைத்து
..
நீ எடுத்த ..
எத்தனையாவது விக்கட்..
நான்?

அட்டகாசமான ஹாட் ட்ரிக் ..
என்று வல்லுநர்
ஒருவர்
கத்திக் கொண்டிருக்கிறார்..
இங்கே!

எழுதியவர் : கருணா (25-May-15, 9:52 am)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 161

மேலே