சன்னல் ஓர பயணம்

பேருந்து பயணம்.........
சிறுவயதில் சன்னல் ஓரம்
வேகமாய் மோதும் காற்றுக்காக,
நாட்கள் செல்ல செல்ல - என்
சன்னல் ஓர பயணம்
காட்சிகளை உள்வாங்கும்
கருவியாக மாறியது.........
மனிதர்களின் வேறுபாடு,
மண்ணில் வேறுபாடு கண்டேன்!
வறுமை கண்டேன் - சில இடங்களில்
செழுமை கண்டேன்!
வெயிலில் உழைப்பவனை கண்டேன்,
வெட்டியாய் ஆடு புலி ஆட்டம்
ஆடுபவனையும் கண்டேன்!
என் அருகில்
அரசியல் பேசுகின்றான்,
ஆன்மிகம் பேசுகின்றான்,
பேசுபவனை இந்த உலகம்
நேசிக்கின்றது என்பது - இந்த
சன்னல் ஓர பயணம் எனக்கு உணர்த்தியது ......................
காட்சிகளை பார்த்து
கண்கள் மூடினேன் வேகமான காற்று
இதமாக மாறியது என் இதயத்திற்கு ...............
என்றும் அன்புடன்
அ.மனிமுருகன்