இலக்கு

உதிர்ந்த இலைகளில்
ஏதாவது ஒன்று
இலக்கை அடைந்திருக்கலாம்;
இல்லையேல்
காற்றின் சூழ்ச்சிகூட வென்றிருக்கலாம்

யாருக்குத் தெரியும்?

இலக்கு என்பது
இலகுவானதா இல்லையாவென்று
யாருக்குத் தெரியும்?

இலக்கு என்பது
இயல்பானவையாக இருக்கும்வரை
அதை
அடைவதென்பதும்
இலகுவாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன்

வாழ்கிறோமோ வீழ்கிறோமோ
கவலையில்லை; - ஆனால்
இலக்கு என்ற ஒன்று
இருந்தால் மட்டுமே
வாழ்க்கையென்ற ஒன்று அர்த்தப்படுகிறது

விதியை நம்புகிறவர்களின்
லட்சியம் வீணானது
லச்சங்களில் வாழ்கிறவர்களின்
இலட்சியம் சுவையற்றது

தலைவிதியை தகர்கின்றவனுக்கே
எந்த இலக்கும்
எளிதில் வசப்படுகிறது

காற்று
தனது இலக்கைநோக்கி செல்கிறது;
அதில் சிக்கிகொண்ட
இலையின் கதியைப்பார்
அதுதான் விதி என்கிறார்கள் சிலர்

அறிவியல்முறைபடி அது
விதியாக இருக்கலாம் - ஆனால்
காற்றைப் பயன்படுத்தியே
தனது இலக்குகளை
அடைந்துகொண்டிருக்கும் இலைகளுக்கு
விதியென்பதெல்லாம் பொய்.


------------------நிலாசூரியன்.

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர். (25-May-15, 4:43 pm)
Tanglish : ilakku
பார்வை : 262

மேலே