உண்மையான மனுஷி

உனக்காக உருகி ,
ஓராயிரம் கவி பாடியும் , சிரிக்க மறுத்த
சின்ன பூ நீயடி ...

வதைப்பதே தொழிலாய் கொண்டுள்ளாய்
என்னை ..
வசீகர பார்வையால் எனை
கொன்று , எந்த கோட்டையை பிடிப்பாய் ?

நிம்மதியில்லா இரவுகளை தந்து
என் உறக்கத்தை நிர்மூலமாகியவளே ..
எங்கு கற்றாய் இந்த வித்தையை ?
இதயம் உண்டா ? உன்னில் ..
இரக்கமற்றவளே ...

என் கவிதைகளும் என்னை பரிகாசம்
செய்கிறது பாரடி ...

உனக்காக உருகி
ஓராயிரம் கவி பாடினேன் ...
இனியும் மறந்தும் பிறந்து விடாதே..
என் காலத்தில்..

அமைதி தேடுகிறது என் தனிமை உன்னால் ..
புரிந்து கொள் ...
அன்பை சுவாசிக்க கற்று கொள் முதலில் ..
அது ஒன்றே உலகின் ஜீவா நாடி ..
அன்றே உண்மையான மனுஷி யாவாய்....

எழுதியவர் : சாருமதி (25-May-15, 5:12 pm)
பார்வை : 130

மேலே