மதிப்பு

"மதிப்பு"

பள்ளியில் ஆசிரியர் மாணவர்களின் வருகையை பதிவு செய்து கொண்டு இருந்தார். அப்போது ரவி எங்கே மூன்று நாட்களாய் பள்ளிக்கு வர வில்லை என்று மற்ற மாணவர்களிடம் கேட்டார் ஆசிரியர். அதற்கு மாணவர்கள் ரவியின் தந்தை குடிப்பதற்கு பணம் வேண்டும் என்று அவனை வேலைக்கு அனுவிட்டார் இனி அவன் பள்ளிக்கு வரமாட்டான் என்று கூறினர். அன்று பள்ளி முடிந்தவுடன் ரவியின் விட்டிற்கு சென்றார் ஆசிரியர் அங்கு ரவியும் அவன் தந்தை கோபாலும் அமர்ந்து இருந்தினர் . ரவியை பள்ளிக்கு அனுப்புமாறு கூறினார் ஆசிரியர். அதற்கு கோபால் இவன் பள்ளிக்கு போய் என்ன பண்ணபோறான் வேலைக்கு போன கை நிறைய பணம் கிடைக்கும்னு சொன்னான். படிப்பின் மதிப்பை உணர்த்த எண்ணினார் ஆசிரியர் .ஒரு சில வெறும் காகிதங்களையும், சில ரூபாய்களையும் கோபால் முன்னாடி போட்டார் . அப்போது கோபால் ரூபாய்களை மட்டும் எடுத்து கொண்டு வெறும் காகிதங்களை குப்பை தொட்டியில் வீசினர். ஏன் இந்த காகிதங்களை மட்டும் வைத்து கொண்டு மற்றவற்றை தூக்கி வீசிடிங்கனு கேட்டார் . இது ரூபாய் இதுக்கு மதிப்பு இருக்கு அந்த காகிதங்களுக்கு மதிப்பு இல்லை என்று கூறினார். அதை தான் நானும் சொல்றேன் வெறும் காகிதத்தில் ஒரு சில வண்ணமும் சில உருவங்களும் பதிக்கும் போது தான் அதன் மதிப்பு கூடுகிறது அதே மாதிரிதான் வெறும் பெயருக்கு படிப்பின் வண்ணம் பதிக்கும் போது தான் அந்த பெயருக்கு மதிப்பு கூடுகிறது. படிப்பால் தான் பகுத்தறிவை வளர்க்க முடியும் என்று படிப்பின் மதிப்பை உணர்த்தினார். பின்பு கோபால் தன் மகனை பள்ளிக்கு அனுப்பி வைத்தார் ........

எழுதியவர் : பீமன் (25-May-15, 8:37 pm)
சேர்த்தது : பீமன்
பார்வை : 282

மேலே