உன் பிரிவினில் நான்
தார் சாலைகளில் நாம்
தடம் பதித்த நான்கு
பாத சுவடுகள் இன்று
இரண்டாக மாறித் திரிகின்றது...
என் துன்பம் துடைக்கும்
உன் விரல்கள் இன்றி
தூங்காத இரவுகளை
தூண்டிலிட்டு பிடிக்கின்றன
என்னிரட்டை விழிகள்...
நீரற்ற கிணற்றில் வாழும்
மீனும் நான்
நிழலற்ற நிலத்தில் வாழும்
மானும் நான்
நீயற்ற நிமிடங்களில்...
கண் முன்னே கடக்கும்
காதல் கூட்டங்களுக்குள்
நான் மட்டும் தனிமையுடன்
பொறாமை ஏதும் இன்றி
ஓராமை போல் நகர்கின்றேன்...
அப்படியே நகர்த்தவும்
செய்கின்றேன் நீயின்றி
நாடி துடிக்கா நாட்களை
சற்று தாடியுடன்...
செ.மணி