ராணுவ வீரன்

வீட்டை தொலைத்த மன காயத்தில்
தோட்டா துளைத்தல் சற்று சாதாரணம் தான்!!

எதிரிகளை வழி மறிப்போம் - மனதில்
எரியும் வலிகளை கூட!!

மனதிற்கு ஒரு தலை பட்சம் கிடையாது
பசுமை இழந்து அதுவும்
பாலை வனத்தில் தான் வாழ்கிறது !!!

சூரியன் மட்டுமல்ல
நாங்கள் சாயும் காலமும்
தெறித்த சிகப்பில் தான் !!!!

எதிரில் காணும் கண்ணீர்
மேக அன்னையின் கருணையில் மட்டும் தான்
வாழ்ந்த போது ஆனந்தமாக
வீழ்ந்த போது ஆறுதலாக !!!

வாழும் வரை
வாழ்கை செல்லும் யாகமாக
சென்ற பின்பு
மக்கள் கொள்வார் தியாகமாக

எங்களை நினைக்கா விடினும்
கோபமில்லை- இன்னும்
தங்களை நிறைக்கா விடின்
எதிர் காலமில்லை!!!

எழுதியவர் : ராஜா வைரமுத்து (26-May-15, 5:35 pm)
Tanglish : raanuva veeran
பார்வை : 1366

மேலே