கண்ணே கண்ணுறங்கு

கண்ணே கண்ணுறங்கு..
கவலையின்றி நீயுறங்கு
நாடுமது நல்லாயில்லை
நன்றாக நீயுறங்கு
மதுதந்த மயக்கத்திலே..
மாணவனும் கிடக்கின்றான்
என்றாலும் மறந்துவிட்டு..
கண்ணேநீ கண்ணுறங்கு
சாதிமத பேதஞ்சொல்லி..
சாமானியரை தின்கின்றார்
என்றாலும் அதைமறந்து..
கண்ணேநீ கண்ணுறங்கு
கல்வியை காசக்கி..
கலைமகளுக்கே விற்றிடுவார்
ஏனென்று கேட்காமல்..
எந்நாளும் நீயுறங்கு
பணம்பார்த்து பாசம்வரும் -மானிடர்
குணம்பார்த்து நீயுறங்கு
செய்வதெல்லாம் செய்துவிட்டு..
கலிகாலம் என்றுசொல்லி
எளிதாக தப்பிடலாம்
என்பதனால் கவலைவிட்டு..
கண்ணே கண்ணுறங்கு

எழுதியவர் : moorthi (26-May-15, 1:34 pm)
பார்வை : 105

மேலே