மணமக்களை வாழ்த்துதல்
ஒரே நேரத்தில் பிறக்கவில்லை
சிந்தனைகள் வெவ்வேறு
வாழும் வழிகள் வெவ்வேறு
ஆனால் கடவுளின் கண்களுக்கு மட்டும்
ஒரே உயிராய் தெரிந்திருக்கிறீர்கள்
அதனால் இணைத்தார் ஒன்றாய்
தடகளத்தில் வெற்றி பெற
கால்களும் மன வலிமையும் போதும்
ஆனால் வாழ்க்கை எல்லையை கடக்க
துன்பத்தில் தோள் கொடுக்கும்
இன்பத்தில் இணைந்து சிரிக்கும்
துணை வேண்டும்
கடவுள் பயம் வேண்டும்
இவை அனைத்தும்
கொண்ட மணமகளும் மணமகனும்
வாழ்க்கை பயணத்தில்
வேரும் தண்டுமாக இருந்து
கடவுளின் ஆசியோடு
வெற்றி பெற
கடவுளிடம் வணங்கி வாழ்த்துகிறேன்.