நெருப்பை உமிழும் ட்ராகன்

ஐயையோ..
விடிந்துவிட்டதா?
இப்போது வந்துவிடுமே
அந்த
நெருப்பை உமிழும் ட்ராகன்

ஆ...
அதோ வந்துவிட்டது

மானிடர்களே கதவடைத்து கொள்ளுங்கள்
பறவைகளே கிளைகளுக்குள் ஒளிந்துகொள்ளுங்கள்
விலங்குகளே காடு விட்டு நாடு வராதீர்கள்

மானிட மரணம்
ஆயிரத்துக்கும் மேலாம்
அந்த நெருப்பை உமிழும் ட்ராகன்
உமிழ்ந்த வெப்பத் தீயில்

ஆமாம்...
இப்போதுதான் தெரிந்தது எனக்கு
அந்த சூரியன் ஒரு
நெருப்பை உமிழும் ட்ராகன் என்று...

ஓ சூரியனே...
ஏன் மாறிப்போனாய் நீயும் இப்படி?
நெருப்பை உமிழும் ட்ராகனாக...

எழுதியவர் : மணி அமரன் (28-May-15, 9:40 am)
பார்வை : 64

மேலே